வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் (பட இணைப்பு) _

ம்பாறை மாவட்டம் பாண்டிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 18 ஆவது நாள் தீப்பள்ளையம் என அழைக்கப்படும் உற்சவத்தின் சிறப்பு நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றன
.இன்றைய தினம் முக்கிய நிகழ்வாக கடற் கரையில் நடைபெற்ற மஞ்சள் பூசும் நிகழ்வு, தீமிதிப்பு, சாட்டை அடித்தல் என்பன நடைபெற்றன.
கிழக்கு மாகாணத்தின் பிரபல்யமான ஆலயங்களில் ஒன்றான இவ் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இம்மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகி இறுதி நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது.
மாகாபாரதக் கதையை மையமாக வைத்து அமைந்திருக்கும் இந்த உற்சவம் மனிதர்களையும் தெய்வமாக பாவனை செய்யும் வகையில் அமைந்திருக்கும் என்பது முக்கியமான அம்சமாகும்.
பாண்டவர்கள் வனவாசம் செல்லுதல், அருச்சுனன் பாசுபதம் பெறுவதற்காக தவம் செய்தலைச் சித்திரப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் தவநிலை என்பன முக்கியமானவையாகும்.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’