வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

தகவல் பரிமாற்ற சிக்கல் காரணமாகவே ஐ.தே.க. எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை

ட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் உரிய முறையில் இடம்பெறாமையாலேயே நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டத்துக்கு வாக்களிப்பதில் இருந்து ஐ.தே.க. எம்.பி.க்கள் மூவர் விலகியிருந்தனர் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தினை மேலும் ஒரு மாதத்துக்கு நிடிப்பது தொடர்பான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் குறித்த சட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
இந்நிலையில், ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியல்ல, ஜோசப் மைக்கல் பெரேரா மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தனர்.
இது தொடர்பாக கேட்டபோதே அக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு கூறினார். அத்துடன் அவசரகால சட்டமூலத்தை நிராகரிப்பதன் ஒரு அங்கமாகவே வாக்களிப்பதிலிருந்து விலகியிருத்தல் கருதப்படுவதால் அந்த வகையிலேயே மேற்படி எம்.பி.க்கள் நடந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சிக்கும் இடையில் எவ்வித முறுகலும் ஏற்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’