வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதிக்கு மின் விநியோகத்திட்டத்தை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று (20) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். புகைப்படம் இணைப்பு
இலங்கைக்கு மின்சாரத்தை அறிமுகப்படுத்திய டி.ஜே. விமலசுரேந்திரவின் 136 வது நினைவுதினம் கடந்த வெள்ளிக்கிழமை 17 ம் திகதி இலங்கைக்கு ஒளியேற்றுவோம் என்ற திட்டத்தின்கீழ் அனுஷ்டிக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே இன்றையதினம் மேற்படி புதிய மின்விநியோகத் திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பருத்தித்துறை வெற்றிலைக்கேணி பிரதான வீதியில் அமைந்துள்ள பெயர்ப்பலகையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திரைநீக்கம் செய்ததுடன் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் ந. திருலிங்கநாதன் இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய முகாமையாளர் முத்திரட்ணானந்தம் பிரதேச படையதிகாரி மேஜர் நந்தகுமார ஆகியோர் மின் அழுத்திகளை அழுத்தி நாகர்கோவில் கிராமத்திற்கான மின்விநியோகத் திட்டத்தை சம்பிரதாயப் பூர்வமாகத் தொடக்கி வைத்தனர்.
வடக்கின் வசந்தம் திட்டத்திற்கூடாக முன்னெடுக்கப்பட்டுள்ள இப்புதிய மின் விநியோகத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுப்புகழ்பெற்ற நாகதம்பிரான் தேவஸ்தானத்திற்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதற்குரிய மின்சார விநியோகத்தையும் தொடக்கிவைத்தார். அத்துடன் தேவஸ்தான பிரதம குருக்களான சிவசண்முக குருக்கள் அவர்கள் விசேடபூஜை வழிபாடுகளையும் நடாத்தி அமைச்சரவர்களுக்கு தெய்வ ஆசி வழங்கினார். கடந்த கொடூரமான யுத்தகாலத்தில் படையினரினதும் புலிகளினதும் காவலரண்களுக்கு இடையில் அமைந்திருந்த மேற்படி பகுதியும் தேவஸ்தானமும் மிகக்கடுமையான மோதல்களை எதிர்நோக்கியிருந்தமை முக்கியவிடயமாகும். இந்நிலையில் வழிபாடுகளைத்தொடர்ந்து தேவஸ்தான சுற்றாடலை சுற்றிப்பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்தகால யுத்தம் பாதித்த இப்பகுதி மிகவிரைவில் இயல்புநிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையினை தெரியப்படுத்தியமை விசேட அம்சமாகும்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’