வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 25 செப்டம்பர், 2010

மருதங்கேணி பாலத்தை உடன் திருத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை

ருதங்கேணிப் பகுதியில் தற்போது மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதால் பொதுமக்களின் போக்குவரத்து வசதி கருதி மருதங்கேணியையும் புதுக்காட்டுச் சந்தியையும் இணைக்கும் மருதங்கேணிப் பாலத்தை திருத்தித் தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
கடந்த 20ஆம் திகதி வடமராட்சி கிழக்குப் பகுதிக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் அமைச்சர் அவர்களது தலைமையில் மருதங்கேணியில் நடைபெற்ற போது பல்வேறு கோரிக்கைகளுடன் மேற்படி கோரிக்கையும் முன் வைக்கப்பட்டிருந்தது.
மருதங்கேணி பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டு வரும் மக்கள் போக்குவரத்திற்காக மிகவும் கஸ்டமானதொரு நிலைக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் இவ்விடயம் தொடர்பில் உடனடி அவதானத்தைச் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்பு கொண்டு இப் பாலத்தை உடனடியாகத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் இப்பாலத்தின் திருத்தப் பணிகளில் அப்பகுதி மக்களுக்கு ஒரு தொழில் வாய்ப்பாக அப்பகுதி மக்களையே ஈடுபடுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’