வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 23 செப்டம்பர், 2010

மட்டக்களப்பின் முன்னாள் எம். பி. கிழக்கு முதல்வருக்கு புகழாரம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராஜதுரை கிழக்கு மாகாண முதலமைச்சரின் சேவை நலனைப் பாராட்டி முதல்வர் சந்திரகாந்தனுக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தார்.
இன்று(22.09.2010) மட்டக்களப்பில் அவரது வீட்டில் முதலமைச்சர் சநத்திரகாந்தனைச் சந்தித்து பேசுகையில், கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கான கட்சி என்ற அடிப்படையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பல சேவைகளைப் புரிந்து வருவதாகவும் மக்களின் நலனில் அக்கறை கொள்கின்ற ஓர் கட்சியாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்நது தமது ஆதரவு த.ம.வி.பு கட்சிக்கு இருப்பதாகவும் மேலும் பல சேவைகளை எமது மக்களுக்காக ஆற்ற வேண்டி இருப்பதாகவும் அதற்கு த.ம.வி.பு கட்சியயுடனான உறவு வலுச்சேர்க்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’