வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 23 செப்டம்பர், 2010

2 வருட சிறைத் தண்டனையின் பின் விடுதலையான மறுநாள் திருட்டுக் குற்றத்தில் மீண்டும் கைது

இரண்டு வருடங்களுக்கு முன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தினால் இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்ட ஒருவர், தனது தண்டனைக் காலம் முடிவடைந்து சிறையிலிருந்து விடுதலையான மறுதினம் மற்றொரு திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் கல்முனையில் கைதாகியுள்ளார்.

2 வருட சிறைத்தண்டனயின் பின் இவர் கடந்த 20 ஆம் திகதி திங்கட்கிழமை விடுதலையானார்.
துவிச்சக்கர வண்டி திருட்டில் தேர்ச்சி பெற்ற இவர், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கல்முனை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, சந்தேகத்தின் பேரில் கல்முனை பொலிஸார் குறித்த நபரை பரிசோதித்த போது, கல்முனை ஆர்.கே.எம் வீதியில் உள்ள ஒருவரின் துவிச்சக்கர வண்டியை வைத்திருந்தமை தெரியவந்தது.
அதையடுத்து குறித்த நபரை கல்முனை பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைது செய்தனர்.
57 வயதான இவர், வெவ்வேறு காலங்களில் மொத்தமாக 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளதாக கல்முனை பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். மேற்படி சந்தேக நபரை நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’