அடுத்த வருடம் முதல் ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்படும் எனக் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா தெரிவித்தார்
.வத்துகாமம் கல்வி வலயத்தில் இடம்பெற்ற ஒரு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
புலமைப்பரிசில் பரீட்சை 10 வயதுப் பிள்ளைக்கு ஒரு சுமையாகவும் அழுத்தம் கொடுக்கும் ஒன்றாகவும் உள்ளது. மாணவர்களை விடப் பெற்றோர் விசேடமாகத் தாய்மார்களே பரீட்சை குறித்து மன எழுச்சிக்குட்படுகின்றனர்.
இதன் காரணமாக சித்தியடையாதவிடத்து, தமது பிள்ளைகளைக் கண்டிக்கின்றனர். இன்னும் ஒரு புள்ளி எடுத்திருந்தால், தம் பிள்ளையும் சித்தியடைந்திருப்பானே என 140 புள்ளி எடுத்த மாணவனைச் சுட்டுகின்றனர்.
சித்தியடையாத மாணவன் புலமைப்பரிசில் சலுகை பெற தெரிவு செய்யப்படவில்லையே தவிர, சித்தியடையாமல் இல்லை.
எனவே குறைந்த மட்ட சித்திப் புள்ளியான 35 புள்ளிகளை இரண்டு பாடங்களிலும் பெற்று 70 புள்ளிகள் பெற்றிருப்பின் அம்மாணவன் சித்தியடைந்தவராகக் கருதப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
ஆனால் அவர் புலமைப்பரிசில் உதவி நிதியைப் பெறமுடியாது போகலாம். அது வேறு விடயம்.
சிரமப்பட்ட மாணவரின் மன திருப்தி கருதி, அவருக்கு நற்சான்றிதழ் வழங்கப்படும். தேவையாயின் அவரது முன்னேற்றத்தை நிரூபிக்கும் வேறு ஆவணமாக இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும்போது சித்தியடையவில்லை என்ற குறை இருக்காது" என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’