வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம். சக்கர நாற்காலிகள் மெத்தைகளையும் அன்பளிப்புச் செய்தார்.

மாவட்ட வைத்தியசாலையாக இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியால் ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்ட ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம் மேற்கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று மாலை வைத்தியசாலையினை வந்தடைந்த அமைச்சர் அவர்களை மாவட்ட வைத்திய அதிகாரி அருண புண்ணியமூர்த்தி தலைமையில் வைத்திய அதிகாரிகள் தாதியர் சுகாதாரத்தொண்டர்கள் மற்றும் ஊழியர்கள் அன்புடன் வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து வைத்தியசாலையினை சுற்றிப்பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நோயாளர் விடுதிகளுக்கும் சென்று விடுதியில் தங்கியுள்ள நோயாளர்களது சுகநலன்களையும் விசாரித்தார்.
இவ்விஜயத்தின் முக்கிய அம்சமாக ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையின் பயன்பாட்டிற்கென ஒரு தொகுதி மெத்தைகளையும் சக்கர நாற்காலிகளையும் அமைச்சரவர்கள் மாவட்ட வைத்திய அதிகாரியிடம் உத்தியோகப் பூர்வமாக கையளித்தார். மேலும் வைத்தியசாலையின் ஏனைய தேவைகள் குறித்து கேட்டறிந்ததுடன் அதுகுறித்து தமக்கு கோரிக்கை கடிதத்தை கையளிக்குமாறும் கேட்டுக்கொண்டார். மற்றொருபுறம் வைத்தியசாலையில் சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றுவோர் தமக்கு நிரந்தர நியமனத்தைப் பெற்றுத்தருமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதற்குப் பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிரந்தர நியமனம் பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கையினை தான் மாவட்டம் தழுவிய ரீதியில் மேற்கொள்வதாகவும் விரைவிலேயே சாதகமான முடிவுகள் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம் மேற்கொண்டபோது ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் சிறிமோகனன் தீவக பொலிஸ் அத்தியட்சகர் பிரேமரட்ண யாழ். மாவட்ட ஈபிடிபி அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் ஊர்காவற்றுறை பொறுப்பாளர் காந்தன் ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’