வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

ஐ.தே.க. எம்.பிகள் இருவர் கட்சியிலிருந்து நீக்கம்

.தே.கவில் பிரதிப் பொதுச்செயலாளராகப் பதவி வகித்த லக்ஷ்மன் செனிவிரட்ன மற்றும் ஏர்ல் குணசேகர ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கியுள்ளதாக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
செனிவிரட்ன, குணசேகர உட்பட 6 ஐ.தே.க. எம்.பிகள் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தரப்புக்கு மாறியமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய நான்கு எம்.பிகள் தொடர்பாக ஐ.தே.க. ஒழுக்காற்றுக் குழு ஆராயும் என ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
இதேவேளை கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவற்றை ஒரே நாளில் பூர்த்தியாக்க முடியாது எனவும் ரணில் விக்கிரசிங்க தெரிவித்தார்.
இதற்குச் சில காலம் தேவைப்படும் எனக் கூறிய அவர், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’