நமது நாட்டில் உண்மையான சமாதானம் இன்னும் ஏற்படவில்லையென மட்டக்களப்பு திருமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் கிங்ஸ்வி சுவாம்பிள்ளை தெரிவித்தார்
.உலக சமாதான தினத்தையொட்டி மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே ஆயர் மேற்கண்டவாறு கூறினார்.
எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் கலாநிதி அருட் தந்தை சிறிதரன் சில்வஸ்ட்டர் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, யுத்தம் முடிவடைந்த போதிலும் உண்மையான சமாதானம் நமது நாட்டில் ஏற்படவில்லை.
சமாதானம் என்பது மிக முக்கியமானது இன்று உலக நாடுகளில் பல் வேறு நாடுகளில் யுத்தத்தினால் மனித குலம் அழிந்து கொண்டே இருக்கின்றது.
சமாதானம் அழிந்தால் ஒற்றுமை அழியும் ஒற்றுமை அழிந்தால் மனித குலம் அழியும் மனித நேயம் மதிக்கப்பட்டால் சகோதரத்துவமும் இன ஜக்கியமும் ஏற்படும். என அவர் இதன் போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் சமாதான கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’