வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 25 செப்டம்பர், 2010

தொழிலாளர் உரிமை தொடர்பில் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் விசாரணை

லங்கையில் இடம்பெறுவதாக கூறப்படும் தொழிலாளர் உரிமை மீறல் குற்றச்சாட்டு மீதான, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் விசாரணை, அடுத்த செவ்வாய்க்கிழமை வாஷிங்டனில் நடைபெறும். இதில் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் தொழிற்சங்களின் பிரதிநிதிகளும் சாட்சியமளிப்பர் என அரசாங்கம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்
.இந்த விசாரணையில் சுகந்திர வர்த்தக வலய தொழிலாளர் சங்க தலைவர் அன்ரன் மார்க்கஸ் முறைப்பாட்டாளர் என்ற வகையில் சாட்சியமளிப்பார் என மார்க்கஸ் டெய்லிமிரருக்கு இன்று தெரிவித்தார்.
பகிரங்கமாக நடைபெறும் இந்த விசாரணையில் அரசாங்கத்தை ஆறு பேர் கொண்ட குழு பிரதிநித்துவப்படுத்தும் என தொழில் அமைச்சின் செயலாளர் மஹிந்த மதிகஹேவ, தெரிவித்தார்.
இந்த குழுவில் வர்த்தக பணிப்பாளர் நாயகம் கோமிஸ் சேனதீர, வர்த்தகத்துக்கான பிரதிப் பணிப்பாளர் கோதமி இந்திகதஹேவா, வெளிவிவகார அமைச்சின் பதில் பணிப்பாளராகக் கடமையாற்றும் வருண முத்துக்குமரண, வெளிவிகார உதவிப் பணிப்பாளர் பொசித பெரேரா, தொழில் அமைச்சின் சிரேஸ்ட சட்ட ஆலோசகர் ஆர்.பி.விமலசேன, தொழில் அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர் யு.எஸ்.அத்துகோரள் ஆகியோர் அங்கம் வகிப்பர்.
இன்று காலை அரசாங்கத்தின் மேற்படி குழுவினர் அமெரிக்காவுக்கு புறப்பட்டதாகவும், இவர்கள் ஒவ்வொருவரும் பேசுவதற்கு ஐந்து நிமிடம் வழங்கப்படும் எனவும் மதிகஹேவ தெரிவித்தார்.
இந்த விசாரணையில் ஸ்ரீலங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் வெஸ்லி தேவேந்திர அரசாங்கத்துறை சார்ந்த தொழிற் சங்களை பிரதிநிதித்துவம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுகந்திர வர்த்தக வலய தொழிலாளர் சங்கம் கைத்தொழில் நிறுவனங்களின் ஒரு முறைப்பாட்டை அமெரிக்க சுதந்திர தொழிலாளர் சங்கத்திற்கு செய்திருந்தது. இந்த முறைப்பாட்டின் பேரில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஸ்ரீலங்காவுக்கு எதிரான நடவடிக்கையை தொடக்கியது. இந்த விடயம் அமெரிக்காவின் ஜி.எஸ்.பி. சலௌகைகளை பாதிக்கக் கூடுமாகையால் பாரதுரமாகின்றது.
இலங்கையில் தொழிலாளர் உரிமை மீறல் பற்றிய தகவல் சேகரிக்க மூவர் கொண்ட அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு ஒகஸ்ட் மாதம் வந்தது. இது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது.
தொழிற்சங்களின் கூட்டாக பேரம் பேசும் உரிமையை மறுத்தல், சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிற்சங்கம் அமைக்கும், கூட்டம் கூடும் உரிமை மறுக்கப்படுதல் ஆகிய பாரதுரமான தொழிலாளர் உரிமை மறுப்புக்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என மார்க்கஸ் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’