வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 25 செப்டம்பர், 2010

மோதல்களை முளையிலேயே கிள்ளியெறிய ஏற்பாடுகள் வேண்டும்:பேரியல் அஷ்ரப்

ற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் நேற்று சாட்சியமளித்த முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் இன மோதல்களை முளையிலேயே கிள்ளிவிடுவதற்கான நிறுவன ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என கூறினார்.

"நான் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க வருவதற்கு சற்று முன் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. என்னுடன் பேசிய பெண் ஜெயதீபா (26) தனது கணவன் 2009 மே 23ஆம் திகதி காணமல் போனதாக கூறினார். எதுவுமறியாத நிலையில் இராணுவத்திடம் முறையிட்ட போது அவர்கள் அப்பெண்ணை அங்கும் இங்கும் அலைக்கழித்தார்கள் எனவும் எதுவுமே உருப்படியாக நடக்கவில்லை என்று கூறி அந்த பெண் அழுதார். அவரது குறையை கவனித்து நடவடிக்கை எடுக்க ஒரு ஒழுங்கும் இருக்கவில்லை என பேரியல் அஷ்ரப் கூறினார்.
2002ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளில் போதிய கவனம் செலுத்தத் தவறிவிட்டது என்பதை அவர் விளக்கமாக எடுத்துரைத்தார்.
ஈடுசெய்தல் என்ற வகையில் முதலில் மக்களின் குறைகளை கேட்பதற்கான ஒரு பொறிமுறையை கிழக்குக்கு அவசியமானதாகும் என அவர் கூறினார்".
வேறு இடங்களைப் போலன்றி எமது பகுதியில் பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கு இடமில்லை. மக்களின் பிரச்சினைகளை கேட்பதற்கு ஒரு பொறி முறை தேவை என அவர் கூறினார்.
வெளிநாட்டவர்கள் மட்டும் தான் தமது பிரச்சினைகளை கேட்டு விளங்கி செயற்படுவார்கள் எனதனது தொகுதி மக்கள் தன்னிடம் தெரிவித்ததாக பேரியல் அஷ்ரப் கூறினார்.
வெள்ளையர்கள் மட்டும் தான் எமக்கு உதவுவார்கள். எனவே நாம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களிடம் போக வேண்டும். எமது இலங்கை ஆட்கள் எமக்கு உதவி வழங்கமாட்டார்கள் என இந்த மக்கள் நம்புகின்றனர் என பேரியல் அஷ்ரப் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’