வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 4 செப்டம்பர், 2010

சச்சின் டெண்டுல்கர்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி

ந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர்கருக்கு , இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான விழா டெல்லியில் உள்ள விமானப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய விமானப்படையின் தலைமை தளபதி பி.வி.நாயக் கலந்து கொண்டு சச்சின் டெண்டுல்கர்கருக்கு கௌரவ 'குரூப் கெப்டன்' அந்தஸ்தை வழங்கினார்.
37 வயதான  சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் முடி சூடா மன்னனாகத் திகழ்கின்றார். ஏற்கனவே பத்மவிபூசன், பத்மஸ்ரீ, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, விஸ்டன் கிரிக்கெட் விருது, அர்ஜுனா உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றிருக்கும் அவருக்கு தற்போது வழங்கப்பட்ட கௌரவம் அவரது மணிமகுடத்தில் மேலும் ஒரு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.
விமானத்துறையின் எந்தப் பின்னணியும் இல்லாமல், விளையாட்டு வீரர் ஒருவருக்கு விமானப்படையில் அளிக்கப்பட்ட மிகப்பெரிய கௌரவ பதவி இதுவாகும். அத்துடன் அவர் விரைவில் போர் விமானத்திலும் பறக்க இருக்கிறார்.

கௌரவ 'குரூப் கெப்டன்' அந்தஸ்தைப் பெற்ற தெண்டுல்கர் பேசுகையில்,

"இந்திய விமானப்படை எனக்கு அளித்த இந்த கௌரவம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய விமானப்படையில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
இந்திய விமானப்படையில் சேர வேண்டும் என்ற எனது சிறு வயது கனவு தற்போது நனவாகி விட்டது. இளைஞர்கள் விமானப்படையில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கனவு காணுங்கள். கனவு ஒருநாள் மெய்ப்படும்" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’