வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 4 செப்டம்பர், 2010

நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

மிழ்மக்கள் அமைதியுடனும் கௌரவமாகவும் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் உறுதி பூண்டுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் உதயன் தெரிவித்தார்.(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்றைய தினம் (2) நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

கடந்த காலங்களில் யுத்தம் காரணமாக தமிழ்மக்கள் பல்வேறு இழப்புக்கள் இடர்களைச் சந்தித்து ஓர் நிர்கதியான நிலைக்கு உள்ளாக்கப்பட்டனர். தற்போது மக்கள் தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்பக் கூடிய சமாதான சூழல் ஏற்பட்டுள்ளது என உதயன் அவர்கள் தெரிவித்தார்.
மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்துவதன் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு காண முடியும். இதற்கு அனைத்து அதிகாரிகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் தமது ஒத்துழைப்பை நல்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் அரச திணைக்களத் தலைவர்கள் அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’