ஐ..ஓ.எம். அமைப்பினுடாக உதவிக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்த நிலையில் பிரதேச செயலகங்களில் பணிபுரிந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு மகேஸ்வரி நிதியத்தினூடாக கொடுப்பனவினை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். புகைப்படம் இணைப்பு
ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் தலா ஐந்து பட்டதாரிகள் என்ற அடிப்படையில் யாழ்.மாவட்டத்திலுள்ள பதினைந்து பிரதேச செயலகங்களிலும் எழுபத்தைந்து பட்டதாரிகள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களுக்குரிய கொடுப்பனவினை ஐ.ஓ.எம். என்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமே வழங்கி வந்தது. தற்சமயம் அந்நிறுவனத்தால் உதவிக்கொடுப்பனவு நிறுத்தப்பட்ட நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்த பட்டதாரிகள் தமது நிலைமையினை எடுத்துரைத்தனர். இன்று மாலை அமைச்சரவர்களின் யாழ்.பணிமனையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சரவர்கள் அவர்களுக்குரிய நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை தொடர்ந்தும் பிரதேச செயலகங்களில் பணிபுரியுமாறும் மகேஸ்வரி நிதியத்தினூடாக உதவிக்கொடுப்பனவினை வழங்க தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். தம்மீதான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அக்கறை குறித்து மேற்படி பட்டதாரிகள் தமது மனமார்ந்த நன்றிகயைத் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’