வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 20 செப்டம்பர், 2010

மண்ணெண்ணெய் அருந்திய குழந்தை மரணம்

மென்பான போத்தலினுள் இருந்த மண்ணெண்ணெய்அருந்திய பின் ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 14 மாதக் குழந்தையொன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்
.பிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த விஜேசிங்க ஆராச்சிகே துஷார மதுசானி எனும் பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சுகவீனமுற்ற நிலையிலிருந்ததாகக் கூறப்படும் குறித்த குழந்தை கடந்த வெள்ளிக்கிழமை வீட்டு சமையல் அறைக்குள் சென்று அங்கிருந்த மென்பான போத்தலினுள் இருந்த மண்ணெண்ணெயை அருந்தியதை அடுத்து தரையில் வீழ்ந்து அழுதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் உடனடியாக குழந்தையை பிங்கிரிய அரச வைத்தியசாலைக்கு பெற்றோர் எடுத்துச் சென்றனர். அதன்பின் அக்குழந்தை அங்கிருந்து சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் சிகிச்சைகள் பலனின்றிய நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக்குழந்தையின் மரண விசாரணை இன்று திங்கட்கிழமை சிலாபம் வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக சிலாபம் பொலிஸார் மேலும் கூறினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’