வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

குடாநாட்டில் அனைத்து இடங்களுக்குமான பயணிகள் போக்குவரத்தே எனது நோக்கம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

குடாநாட்டின் போக்குவரத்துத் துறைக் கட்டமைப்பைப் பொறுத்தவரையில் 80களின் நேரசூசி அடிப்படையில் குடாநாட்டில் அனைத்துப் பகுதிகளுக்குமான சீரான போக்குவரத்துச் சேவைகள் மேற்கொள்ளப்பட்டனவோ அதே போன்று இன்றும் சீரான பயணிகள் போக்குவரத்துச் சேவை அனைத்துப் பகுதிகளுக்குமாக மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதே எனது நோக்கமாகும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (18) யாழ் கோண்டாவில் இலங்கை போக்குவரத்து சபைச் சாலை யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான இ.போ.சபையின் சேவைகள் தொடர்பிலான முன்னேற்ற ஆய்வரங்கை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போக்குவரத்து பிரதி அமைச்சர் ரோஹன திசாநாயக்க இலங்கை போக்குவரத்துச் சபையிடம் தற்போது 4800 பஸ் வண்டிகள் இருப்பதாகவும் இதனை 7000 மாக அதிகரித்துக் கொள்வதே தனது அமைச்சரின் நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்.
வட பகுதி மக்களின் வாழ்க்கை நிலை குறித்தும் இப்பகுதி அபிவிருத்தி குறித்தும் பாராளுமன்றத்திலும் சரி வெளியிலும் சரி தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பங்களிப்புடனும் அசீர்வாதத்துடனும் வட பகுதியின் போக்குவரத்துச் சேவைக் கட்டமைப்பை தமது அமைச்சு நிச்சயமாக விருத்தி செய்யும் என நம்பிக்கைத் தெரிவித்த பிரதியமைச்சர் இதற்கென இப்பகுதி வாழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களது பங்களிப்புக்களை வழங்க முன்வர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சாரதிகளுக்கும் 15 காப்பாளர்களுக்குமான நியமனக் கடிதங்கள் அமைச்சர்களால் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டன.









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’