மும்பை: கர்ப்பமானதால் பணியை விட்டு நீக்கப்பட்ட ஏர் ஹோஸ்டஸுக்கு 20 ஆண்டுகள் கழித்து இப்போது வேலை வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது
.விமானப் பணிப் பெண்ணாக இருந்தவர் ஷஷிகர் ஜாதவர். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு 2வது முறையாக கர்ப்பமானதைத் தொடர்ந்து பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து தொழிலாளர் நல தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார் ஷஷிகர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், கடந்த 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷஷிகரை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு உத்தரவிட்டது. ஆனால் அதை விமான நிறுவனம் நிறைவேற்றவில்லை.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகினார் ஷஷிகர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி. பி. மஜ்முதார், அனூப் மோத்தா ஆகியோர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டனர்.
ஜாதவை மீண்டும் பணியில் அம்ர்த்தினால் தீர்ப்பாயம் கூறியுள்ள தேதியில் இருந்து இன்று வரை அவருக்கு எந்த சம்பள பாக்கியும் வைக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’