வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 30 செப்டம்பர், 2010

பொன்சேகாவுக்கு ஆதரவான இராணுவ அதிகாரிகளின் மனு விசாரணைக்கு ஏற்பு

டந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தவேளையில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிகள் 13 பேர் தாக்கல் செய்த உரிமை மீறல் மனு இன்று வியாழக்கிழமை உயர் நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது
.நீதிபதிகள் சலீம் மன்சூர், பி.ஏ.ரட்நாயக்க, எஸ்.ஐ.இமாம் ஆகியோரடங்கிய குழு இந்த மனுவை ஏற்றுக்கொண்டது. எல்.எம்.ஆர்.புஸ்பசிறி, எஸ்.டி.ஜி.தர்மசிறி, டி.எம்.ஆர்.பண்டா, ஜி.டபிள்யூ.ஜரட்ன, பி.டி.ஏ.றோகன், ஆர்.எம்.ஆரியரத்ன, பி.எச்.வசந்த, ஜி.எம்.ஏ.பண்டா, எம்.ஜி.டொனால்ட், எச்.பி.டி.எஸ்.பத்திரண, எச்.டி.றொஷான் ஆகியோர் தற்போது இரகசிய பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தமது பிரசார பயணத்தின் போது கொக்கரல்ல பகுதியில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த சமயம் பிரசன்ன விக்கிரமசூரிய என்பவர் அடியாட்களுடன் வந்து தம்மை சூழ்ந்து பிடித்து கடத்திச் சென்றனர் என்றும் பின்னர் தம்மை கொக்கரல்ல பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தாம் இப்போது இரகசிய பொலிஸாரினால் அரசாங்கத்துக்கு எதிராக சதி வேளையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’