வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

தற்காப்பு கலைகளைப் பயின்று சமூகத்திற்கு முன்னோடிகளாக விளங்கவேண்டும். கராத்தே வீரர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரை.

யாழ். தீவக கராத்தே சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கராத்தே வீரர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்றையதினம் ஊர்காவற்றுறையில் இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஊர்காவற்றுறை கராத்தே சங்க பொதுமண்டபத்தில் இன்று மாலை இடம்பெற்ற மேற்படி நிகழ்விற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களையும் ஏனைய பிரமுகர்களையும் ஊர்காவற்றுறை சிறிய புஷ்பம் கன்னியர் பாடசாலை மாணவிகள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்று அழைத்துச்சென்றனர். தீவக கராத்தே சங்கத் தலைவர் ஜெயனேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகப் பங்குகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கராத்தே வீரர்களுக்கான விருதுக்குரிய சான்றிதழ்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய அமைச்சரவர்கள் கராத்தே பயிற்சியானது மகச்சிறந்ததொரு தற்காப்புக் கலை எனத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர் கராத்தே பயிற்சி மூலம் உடல் நிலை பேணப்படுவதுடன் மனோபலமும் அதிகரிக்கின்றது. எனவே இத்தற்காப்பு கலையினை தனிப்பட்ட குரோதங்களுக்கு பயன்படுத்தாமல் சமூகத்தின் முன்னோடிகளாக விளங்க வேண்டும் எனத்தெரிவித்தார்.

கராத்தே வீரர்களுக்கான விருது வழங்கும் இந்நிகழ்வில் ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் சிறிமோகனன் தீவக பொலிஸ் அத்தியட்சகர் பிரேமரட்ண யாழ். மாவட்ட ஈபிடிபி அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் ஊர்காவற்றுறை பொறுப்பாளர் காந்தன் அகில இலங்கை கராத்தே சங்க நிர்வாக உறுப்பினர் அன்ரன் டினேஷ் யாழ். மாவட்ட கராத்தே சம்மேளனத்தலைவர் ரேமன் பெனடிக்ட் ஊர்காவற்றுறை சிறிய புஷ்பம் கன்னியர் பாடசாலை அதிபர் அருட்சகோதரி சகாயநாயகி உட்பட பெருமளவு கராத்தே வீரவீராங்கனைகளும் பொதுமக்களும் பங்குகொண்டனர். பலதரப்பட்ட வர்ண பட்டிகளுக்குரிய கராத்தே விருதுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடமிருந்து வீரவீராங்கனைகள் பெற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.











0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’