"நான் அரசியல் கைதியாக கொழும்பு மகசின் சிறைச்சாலையில் நீண்ட காலமாக இருந்துள்ளேன். எனவே, எனக்கு சிறை முறைமை பற்றி மிக நன்றாகத் தெரியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று இடம்பெஏற்ற "கைதிகள் நலன்" தின நிகழ்வில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
குற்றவியல் கோவையையும் முற்று முழுதாக மாற்றி அமைக்க வேண்டிய தேவையுள்ள்து. இதன் மூலம், சிறைச்சாலைகளில் நெருக்கடியைக் குறைக்க முடியும். இது நாட்டுக்கும் கைதிகளின் புனர்வாழ்வுக்கும் நன்மையாக இருக்கும்.
கீழ்மட்ட நீதிமன்ற நீதிவான்கள், சிறு குற்றம் இழைத்தவர்களை சமூக சேவைக்கு அனுப்ப வழிவகுக்கும் சட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்துவதில்லை.
ஐ.ஆர்.சி.க்களும் போதை வஸ்து பெரும் முதலாளிகளும் குற்றச் செயல்களை தொழிலாக செய்வோரும் பாதுகாப்பாக இருந்துகொண்டு தொலைபேசி, கூட்டாளிகளின் துணையோடு குற்றச் செயல்களை தொடர்வதற்கான இடமாக சிறைச்சாலைகள் மாறிவிட்டன எனவும் ஜனாதிபதி கூறினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’