வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

பிரதமர் மட்டக்களப்பு வைத்திய சாலைக்கு விஜயம்

பிரதமர் தி.மு.ஜயரட்ன இன்று மாலை மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு சென்று கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் மற்றும் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார்
.இவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு வைத்தியசாலை அதிகாரிகளுக்கு பிரதம மந்திரி உத்தரவிட்டார். இச்சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த பிரதமர் சம்பவத்தில் மரணமடைந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்புக் கொடுப்பனவும் வழங்கப்படுமெனவும் பிரதமர் தெரிவித்தார்.
பிரதமருடன் சீனா நாட்டுத் தூதுவர் யங் க்சூப்பிங் மற்றும் மற்றும் சீனா நாட்டுத்தூதுரக அதிகாரிகள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
பிரதமர் சம்பவ இடம்பெற்ற இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். இச்சம்பவம் தொடர்பான முழு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இதன்போது பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார். இதன் போது அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’