மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிவிபத்து தொடர்பில் உடனடியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது அமர்வில் கலந்து கொள்ளும் நோக்கில் அமரிக்கா சென்றுள்ள மகிந்த ராஜபக்ஷ, அங்கிருந்து இந்த உத்தரவை விடுத்துள்ளார்.
தற்காலிக பாதுகாப்பு செயலாளர் லலித்வீரதுங்க மற்றும் காவற்துறை மா அதிபர் ஆகியோருக்கு இது தொடர்பிலான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இந்த வெடிவிபத்து சம்பத்தினால் பலியான குடும்பங்களுக்கு தமது அனுதாபத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’