வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 20 செப்டம்பர், 2010

நாவற்குழி மகிந்தபுரம் மக்களுக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிவரும் பணிகள் ஏராளம்!

நாவற்குழி மகிந்தபுரம் வீடமைப்புத் திட்ட மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிவரும் பணிகள் ஏராளமாகும். யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கூட அபிவிருத்தியே முக்கியமெனக் கூறி அவர் இப்பகுதிக்கும் மக்களுக்கும் ஆற்றியுள்ள சேவைகள் எண்ணிலடங்காதவை என நாவற்குழி வீடமைப்புத்திட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் டயஸ் தெரிவித்தார் புகைப்படம் இணைப்பு .


நாவற்குழி சான்றோர் சனசமூக நிலைய சிறுவர் நலநோக்கு மண்டபம் இன்றைய தினம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, வீடுகளின் உறுதிகளின்றி எவ்விதமான உதவிகளும் இல்லாமல் வறுமை நிலையில் வாடிக் கிடந்த எங்களுக்கு வீடுகளுக்கான உறுதிகளைப் பெற்றுக் கொடுத்ததுடன் மட்டுமல்லாது எமது வாழ்வாதாரங்கள் மற்றும் வசிப்பிடங்கள் தொடர்பில் தொடர்ந்தும் பல்வேறு உதவிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்டு வருகிறார் என்றும் இதற்காக எமது மக்கள் சார்பில் அமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
அப்பகுதி கிராம சேவையாளர் உரை நிகழ்த்தும் போது ஒருபக்கம் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் நாங்கள் சென்றிருந்தோம். உடைந்தும் சிதைந்தும் போன நிலையிலான வீடுகளில் நாங்கள் வசித்து வந்தோம். யுத்தம் நடந்து கொண்டிருந்தாலும் எமது மக்களின் அபிவிருத்தியே முக்கியமெனக் கருதி அக்கால கட்டத்திலேயே எமது பகுதியிலுள்ள வீடுகளை செப்பனிட்டும் மின்சார வசதிகளை ஏற்படுத்தியும் தந்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எனக் கூறினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மகிந்தபுரம் வீடமைப்புத் திட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் தீர்க்கப்படாத சில பிரச்சினைகள் இருப்பதாகவும் இவை வெகு விரைவில் தீர்த்து வைக்கப்படுமெனவும் தெரிவித்தார். அத்துடன் இப்பகுதி மக்களுக்கு பாரிய உதவிகளை வழங்கி வருகின்ற வேர்ல்ட் விஷன் நிறுவனத்திற்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’