வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 16 செப்டம்பர், 2010

மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் சிரத்தையுடன் செயலாற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அமைச்சர் பசில் நன்றி தெரிவிப்பு!

யாழ் மாவட்டத்திற்கான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரச செயலக மண்டபத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
வடமாகாண அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களான பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோர் பிரசன்னமாயிருந்த இந்த மீளாய்வுக் கூட்டத்தில் யாழ் குடாநாட்டில் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அதற்கு அரசு சார்பாக எடுக்கப்பட வேண்டிய தீர்வுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

குறிப்பாக விவசாயம் கால்நடை வளர்ப்பு சுகாhரம் நீர்வழங்கல் வீதி அபிவிருத்தி மீள்குடியேற்றம் மருத்துவம் மீன்பிடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் கல்வி போக்குவரத்து தபால்சேவை வங்கிச் சேவை பொருளாதார அபிவிருத்திச் சபை சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டம் சமூக அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து துறைசார்ந்த அதிகாரிகளிடம் அமைச்சர் பசில் ராஜபக்ச கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் குடாநாட்டில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்கு பணிகள் குறித்தும் அவர் ஆராய்ந்தறிந்தார். அத்துடன் மக்கள் மீள்குடியமர்வின் போது எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்தும் அதற்கு அரசு சார்பில் எடுக்கப்பட வேண்டிய தீர்வுகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்த அமைச்சர் பசில் ராஜபக்ச வசாவிளான் தொண்டமனாறு மற்றும் காங்கேசன்துறையின் சில பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் உறுதிமொழி வழங்கினார்.
இறுதியில் அங்கு உரைநிகழ்த்திய அமைச்சர் பசில் ராஜபக்ச இங்கு வந்த மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னரே இம்மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தேவைகள் கோரிக்கைகள் குறித்து அறியக் கூடியதாக உள்ளது.
அந்த வகையில் எனது அமைச்சினூடாக இங்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுமென்றும் குறிப்பாக மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் அதிக சிரத்தையுடன் செயலாற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
அத்துடன் இன்றைய அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஏனைய துறைசார்ந்த அதிகாரிகளுக்கும் அமைச்சர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
இன்றைய கூட்டத்தில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மகிந்த யாப்பா அபேவர்தன மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் சந்திரகுமார் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் யாழ் மாநகர மேயர் உள்ளிட்டோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் சுமந்திரன் சரவணபவன் மற்றும் மாவட்டத்தின் துறைசார்ந்த பல்வேறு தரப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’