வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 6 செப்டம்பர், 2010

பள்ளிவாசலில் மோதல்; இருவர் பலி

திருவாரூர் மாவட்டம் தி்ருவிடைச்சேரியில் ஒரு பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்
.திருவிடைச்சேரி கிராமத்தில் உள்ள சில முஸ்லீம்கள் அங்குள்ள ஜமீத் முகைதீன் பள்ளிவாசலுக்குச் செல்லாமல் தனியார் ஒருவரது இல்லத்தில் தொழுகை நடத்தி வந்தனர்.
இது சமூகக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு முரணானது என்று கூறி தனியார் இல்லத் தொழுகையை நிறுத்துமாறு கிராமத்து ஜமாத்தினர் கேட்டுக்கொண்டனர் மேலும் அது குறித்து பேச்சுவார்த்தை நட்த்தவருமாறு புறக்கணிப்புக் குழுவிற்கு அழைப்பு அனுப்ப்ப்பட்டது.
ஞாயிறு இரவு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே, புறக்கணிப்புக் குழுவைச் சேர்ந்த ஹாஜி முகம்மது என்பவர் தனது கைத்துப்பாகியினால் அங்கு குழுமியிருந்தவர்கள் மீது சுட்டதாகக் கூறப்படுகிறது.
அதில் பள்ளிவாசல் இமாம் இஸ்மாயிலும் இன்னொருவரும் உயிரிழந்தனர். மேலும் நால்வர் காயமுற்றனர்.
துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படும் முகம்மதுவும் மற்றவர்களும் அங்கிருந்து தப்பிவிட்டனர். ஆனால் பின்னர் போலீசார் மோதலில் சம்பந்தப்பட்டதாக 10க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளனர்.
முகம்மதுவின் வீட்டில் சோதனை போடப்பட்டு இருக்கிறது.
தற்போது மத்திய மண்டல ஐஜி கரன் சின்ஹாவும் வேறு சில உயர் அதிகாரிகளும் திருவிடைச்சேரியில் முகாமிட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’