நீதிச்சேவை மற்றும் நிர்வாக அதிகாரிகளின் கவனயீனமான செயற்பாடுகளால் 5 வருட காலத்தை சிறையில் கழித்த நபர் ஒருவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது
.லியன ஆரச்சி சாந்தலால் ஜயவர்தன எனும் இந்நபர் கொலைச் சம்பவமொன்று தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2002 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பிணைத் தொகையை செலுத்த வழியில்லாததால் அவர் தொடர்ந்தும் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.
2005 ஆம் ஆண்டு அவரை விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் விடுத்த அறிவித்தல் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு முறையாக அறிவிக்கப்படாததால் கடந்த ஓகஸ்ட் மாதம் வரை அவர் சிறையிலேயே இருந்தார்.
இது தொடர்பாக அவர் தொடுத்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டபோது நீதிபதிகள் சலீம் மஹ்ரூப் பி.ஏ. ரட்ணாயக்க எஸ்.ஐ.இமாம் ஆகியோர் அந்நபரை உடனடியாக விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டனர்.
அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் பொருத்தமான வழிகாட்டல்களைத் தயாரிப்பது குறித்து நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர், நீதியமைச்சின் செயலாளர் , சிறைச்சாலைகள்- புனர்வாழ்வு திணைக்களம் ஆகியவற்றுக்கு அறிவிக்குமாறும் சட்டமா அதிபருக்கு நீதிபதிகள் பணிப்புரை வழங்கினர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’