வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

மனித எலும்புக்கூடு ஓமந்தையில் கண்டுபிடிப்பு

மந்தை இராணுவ பொலிஸ் சோதனைச்சாவடியின் முன்னணி காவலரண்களுக்கு அப்பால் மயிலங்குளம் கிராமசேவையாளர் பிரிவில் காட்டுப்பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்
.ஓமந்தை சோதனைச்சாவடியிலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த டென்மார்க் நாட்டு நிறுவனமாகிய டிடிஜி அமைப்பைச் சேர்ந்த கண்ணிவெடி அகற்றும் பணியாளர் ஒருவர் பற்றைக்குள் எலும்புக்கூடு கிடந்ததைக் கண்டு பொலிசாருக்கு அறிவித்ததையடுத்தே இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி வவுனியா மாவட்ட நீதின்றத்திற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சனிக்கிழமை நீதவான் எம்.கணேசராஜா சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார்.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் இறந்த ஒருவருடைய எலும்புக்கூடாக இது இருக்கலாம் என நம்பப்படுகின்றது. அத்துடன் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதைப் போன்ற சீருடை சைனைட் குப்பி மற்றும் பெண்கள் அணியும் உள்ளாடை போன்றவற்றின் எச்சங்களும் இந்த எலும்புக்கூட்டுக்கருகில் காணப்பட்டதாகவும் இதனால் இறந்தவர் விடுதலைப்புலி அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண் உறுப்பினருடைய எலும்புக்கூடாக இது இருக்கலாம் என்ற சந்தேகமும் எற்பட்டுள்ளது.
சம்பவ இடத்“தில் நடைபெற்ற விசாரணைகளையடுத்து. எலும்புக்கூட்டையும் தடயப் பொருட்களையும் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி அங்கு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் ஓமந்தை பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’