வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

பொன்சேகா மீது மேல் நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு

ராணுவத்திலிருந்து தப்பியோடிய படையினரை தமது பாதுகாப்பில் வைத்திருந்ததாகவும் அவர்களை அரசாங்கத்திற்கு எதிராக கலகம் செய்யத் தூண்டியதாகவும் இராணுவ வீரர்களை தமது கடமைகளிலிருந்து விலகச் செய்வதற்கு முயற்சித்தாகவும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் அவரின் அந்தரங்க உதவியாளர் மேஜர் சேனக ஹரிப்பிரியவும் மேல் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் சிரேஷ்ட சட்டத்தரணி இன்று தெரிவித்தார்
.கொழும்பு நீதவான் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டபோது இவ்விடயத்தில் தண்டனை சட்டக்கோவையின் 125 ஆவது பிரிவின்கீழ் இவர்கள் இருவர் மீதும் சட்டமா அதிபர் குற்றம் சுமத்தியிருப்பதாக அரச சட்டத்தரணி தமித் தொட்டவத்த கூறினார்.
இக்குற்றப்பத்திர இலக்க விபரம் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கவில்லை எனவும் அது கிடைத்தவுடன் நீதவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார். இந்நிலையில் இவ்வழக்கை ஓகஸ்ட் 30ஆம் திகதிக்கு கொழும்பு பிரதம நீதிவான் ரஷ்மிகா சிங்கப்புலி ஒத்திவைத்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’