வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 18 ஆகஸ்ட், 2010

மக்கள் பணியின் இலகுவாக்கல் குறித்து நேரடி ஆய்வு!

யாழ் குடாநாட்டில் மக்கள் நலன்சார்ந்த பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பாரிய உதவிகளை வழங்கி வருகின்ற மகேஸ்வரி மன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக அங்கு வருகை தரும் மக்களுடன் கலந்துரையாடி பல்வேறு வசதிகளை அம்மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று அங்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இதன் போது, இம்மன்றத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் இலகுத் தன்மை தொடர்பாகத் தனித் தனியாக ஆராய்ந்த அமைச்சர் அவர்கள் அங்கு வருகை தந்திருந்த பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களது கருத்துக்களைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’