வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 18 ஆகஸ்ட், 2010

இலங்கை விவகாரம் தொடர்பாக கருணாநிதி - நிருபமா ராவ் கலந்துரையாடல்

லங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு நிலைமைகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியை இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இன்று பிற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
.இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தித் தேவைகளை அவதானிப்பதற்காக இந்திய மத்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதியொருவர் அடுத்த மாத முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என நிருபமா ராவ் கூறியுள்ளதாக "இந்து" பத்திரிகை தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் கருணாநிதியுடன் 45 நிமிடங்கள் கலந்துரையாடிய நிருபமா ராவ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் 'புனர்வாழ்வுக்கு அப்பால் அபிவிருத்தி குறித்தும் ஆராய வேண்டியுள்ளது. ஜீவனோபாயம், தகவல்தொடர்பு ஆகியனவற்றையும் ஆராய வேண்டியுள்ளது. எனவே, வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களுக்கு எவ்வாறு நாம் உதவ முடியும் என்பது நாம் ஆராய்கிறோம்' எனத் தெரிவித்தார்.
'புனர்வாழ்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம்' எனவும் அவர் கூறினார்.
இவ்வருடத்திற்குள் யாழ்ப்பாணத்தில், இந்திய தூதரக ஆலோசனை அலுவலகம் அமைக்கப்படும் எனவும் வடக்கிலுள்ள மக்களின் தேவைகளை இந்தியா மேலும் சிறந்த முறையில் மதிப்பிடுவதற்கும் இந்த அலுவலகம் உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’