வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

விசாரணை நடத்துமாறு முதலமைச்சர் சந்திரகாந்தன் வலியுறுத்தல்

ட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணி கடத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்துமாறு இராணுவத்தினரையும் பொலிஸாரையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் வலியுறுத்தியுள்ளார்
.கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ள சகாயமணியின் குடும்பத்தினர், முதலமைச்சர் சந்திரகாந்தனை சந்தித்து இக்கடத்தல் தொடர்பாக சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.
அதன்பின் இராணுவத்துடனும் கிழக்குப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபருடனும் தொடர்புகொண்ட முதலமைச்சர் சந்திரகாந்தன், மாநகர சபை உறுப்பினரைக் கண்டுபிடிப்பதற்கு விரைவான விசாரணை நடத்துமாறு வலியுறுத்தியதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளர் ஆஸாத் மௌலானா டெய்லி மிரர் இணையத் தளத்திற்குத் தெரிவித்தார்.
அதேவேளை, 'இக்கடத்தல் குறித்து ஏற்கெனவே விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக பொலிஸார் எமக்கு அறிவித்துள்ளனர். கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் ஆயுதங்களைக் கொண்டிராத நிலையில் யார் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என எமக்கு சந்தேகம் உள்ளது. போர் முடிவுற்று கிழக்கில் சமாதானம் நிலவும் நிலையில், இக்கடத்தலுக்கு யார் பொறுப்பு என்பதற்கு பொலிஸார் மாத்திரமே எமக்கு சில பதில்களை வழங்க முடியும்' எனவும் ஆசாத் மௌலானா கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’