வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

மானிப்பாய் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினருடனான சந்திப்பு

லநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களை இலாப நோக்குடன் செயற்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார் புகைப்படம் இணைப்பு
.மானிப்பாய் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் ஊழியர்களுடனான கலந்துரையாடலொன்று இன்று (23) பிற்பகல் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இங்கு நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டு கருத்துத் தெரிவித்த சந்திரகுமார் அவர்கள் ஆரம்ப காலத்தில் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் இலாப நோக்குடன் முன்னணியில் காணப்பட்டது, ஆனால் தற்பொழுது சங்கங்கள் தலைகீழாக மாறியுள்ளது. இதற்கு காரணம் நிர்வாக சீர்கேடுகள் தான் எனத் தெரிவித்துள்ளார்.
ஆகவே பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். நாங்கள் இதனை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு கடினமாக உழைக்க வேண்டும். அனைவரும் பெறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
மானிப்பாய் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க பொதுமுகாமையாளர் ஊழியர் போன்றவர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக அரைக்கும் ஆலைக்கு தேவையான இயந்திரத்தைப் பெற்றுத் தருவதாகவும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க லொறியை மண் பாவனைக்குப் பயன்படுத்த அனுமதி பெற்றுத் தருவதாகவும் வங்கிக் கடன் பெறுவது தொடர்பில் எமது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கூட்டுறவுச் சங்கத் தலைவர் வன்னியசேகரம் பொதுமுகாமையாளர் ராவேந்திரன் ஈ.பி.டி.பி.யின் வலிகாம பிரதேச இணைப்பாளர் ஜீவன் மானிப்பாய் பிரதேச பொறுப்பாளர் ஜீவா உட்பட கூட்டுறவுச் சங்க ஊழியர்களும் கலந்து கொண்டனர்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’