வாகரை, பனிச்சங்கேணியிலுள்ள உப தபாலகமொன்றிலிருந்த இரும்புப் பெட்டகமொன்றை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள உப தபாலதிபரையும் அதைக் கொள்வனவு செய்த மூன்று வர்த்தகர்களையும் 14 தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது
.குறித்த இரும்புப் பெட்டகத்தை கொள்வனவு செய்த வர்த்தகர்கள் அதை நேற்றுமுன்தினம் பொலன்னறுவையை நோக்கி வாகனமொன்றில் கொண்டு சென்றபோது, வீதிச் சோதனை மேற்கொண்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அதையடுத்து மேற்படி உபதபாலதிபர், வர்த்தகர்கள் ஆகியோர் மட்டக்களப்பு நீதவான் வி.ராமக்கமலன் முன்னிலையில் வாகரை பொலிஸாரால் ஆஜர் படுத்தப்பட்டபோது, நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.
                      -
                    

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’