யாழ்பாணத்திலும் ஹம்பாந்தோட்டையிலும் இந்தியத் துணைத் தூதரகங்கள் அமைக்கப்படவுள்ளன.
இது தொடர்பில் இலங்கை வெளியுறவுத்துறைச் செயலர் சி.ஆர் ஜயசிங், இந்திய உயர்ஸ்தானிகர் அஷோக் கே கந்தா ஆகியோருக்கிடையில் இன்று குறிப்பு பரிமாற்றம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது
.கடந்த ஜூன் மாதம் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.
இருவருக்கும் இடையில் அங்கு இடம்பெற்றிருந்த பரஸ்பர பேச்சுக்களின் பலனாகவே இத்துணைத் தூதரகங்கள் அமைக்கப்பட உள்ளதாக இந்திய தூதுவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவிருக்கும் துணைத் தூதரகம் மூலம் நன்மை அடைவர்.
காலி மாத்தறை, அம்பாந்தோட்டை, மொனறாகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட இருக்கும் துணைத் தூதரகம் மூலம் நன்மை அடைவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’