வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

வவுனியா மெனிக் பாம் முகாம்களை நிருபமா இன்று பார்வையிட்டார்

நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ், இன்று வவுனியா மெனிக் பாம் முகாமுக்குச் சென்றுள்ளார் புகைப்படம் இணைப்பு
.இந்திய வெளியுறவுச் செயலாளர் திருமதி நிருபமாராவ் திருமுருகண்டி, இந்துபுரம், சாந்தபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை இன்று 31.8.2010 அன்று காலை சுமார் 11.30மணியளவில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பிற்கு வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமை தாங்கினார். இடம் பெயர்ந்த மக்களின் சார்பில் திரு.சக்திவேல் உரையாற்றியதுடன் இலங்கை ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளித்த மகஜரின் நகலையும் திருமதி நிருபமா ராவிடம் கையளித்தார்.
சிவசக்தி ஆனந்தன் தனது தலைமையுரையில், 1977இல் இடம்பெற்ற இனக்கலவரத்தில் மலையகத்தில் விரட்டியடிக்கப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கிளிநொச்சிப் பகுதியில் குடியேறினர். அப்பகுதியில் அவர்களது கடின உழைப்பினால் காணிகளைத் துப்பரவாக்கி பயன்தரும் மரங்களை வளர்த்ததுடன் நெற்செய்கையிலும் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின்பொழுது அவர்கள் மீண்டும் இடப்பெயர்வினைச் சந்தித்துள்ளனர். இப்பொழுது அவர்கள் மீண்டும் தமது காணிகளில் குடியேற முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் இல்லாத ஒன்றைக் கேட்கவில்லை. அவர்கள் தமது சொந்தக்காணிகளில் மீண்டும் குடியேறுவதற்குத் தாங்கள் ஆவன செய்ய வேண்டும் என்று கூறினார்.
இடம்பெயர்ந்த மக்களின் சார்பாக உரையாற்றிய திரு. சக்திவேல் தனது உரையில், நாங்கள் 1977ஆம் ஆண்டிலிருந்து சாந்தபுரம், இந்துபுரம் மற்றும் திருமுருகண்டி ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றோம். ஆனால் இப்பொழுது நாங்கள் அங்கு குடியேற முடியாது என்று வவுனியா அரசாங்க அதிபர் கூறுகின்றார். நாங்கள் எமது பகுதியில் மா, பலா, தென்னை, வாழை, பனை மற்றும் தென்னை என்று பல்வேறு பயன்தருகின்ற மரங்களைப் பயிராக்கியதுடன் நெற்செய்கையையும் மேற்கொண்டிருந்தோம். இப்பொழுது அம்மரங்கள் நன்கு வளர்ந்து பலனளிக்கின்ற வகையில் வளர்ந்துள்ளன. இப்பொழுது நாங்கள் அங்கு குடிபுக முடியாது என்று சொல்லப்படுகிறது. ஆகவே தாங்கள் எங்களை எமது சொந்தங்களில் குடியேறுவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இறுதியுரை நிகழ்த்திய திருமதி நிருபமாராவ் தனது உரையில், மீள்குடியேற்றம் எந்தளவிற்கு நடைபெற்றுள்ளது என்பதையும் இந்தியா வழங்கிய உதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் கண்டறிவதே எனது இந்த விஜயத்தின் நோக்கமாகும். நீங்கள் கூறிய விடயங்களை நான் அரசாங்க அதிபருடனும் ஆளுநருடனும் கலந்தாலோசித்து அவர்களது கருத்துக்களை இந்திய அரசாங்கத்திடம் தெரிவிப்பேன் என்றும் இருநாடுகளும் இணைந்தே மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி ஆகியவிடயங்களை மேற்கொள்ளும் என்றும் உங்களை நேரில் சந்தித்து விடயங்களைப் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி என்றும் கூறினார்.









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’