வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

35 வீத அரச ஊழியர்கள் நேர்மையாக சேவை புரிபவர்கள் : நீதிபதி ஷிரானி

லங்கையிலுள்ள 35 சதவீதமான அரச ஊழியர்கள் மிக நேர்மையுடனும் விசுவாசத்துடனும் சேவை புரிபவர்கள் என்று உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி.ஷிரானி திலக்கவர்த்தனா தெரிவித்தார்
.ஒரு தனி மனிதனால் முழு உலகையும் மாற்ற முடியும் என்பதைக் காட்டியவர்தான் ஆபிரகாம் லிங்கன். எனவே மாற்றம் என்பது எம்மால் மேற்கொள்ளக்கூடிய ஒன்று என்றும் அவர் கூறினார்.
கண்டி ஹந்தானையில் அமைந்துள்ள இலங்கை புற்று நோயாளர் சங்கக் கண்டிக் கிளையின் 37ஆவது வருட மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
"எல்லா மனிதருக்கும் சட்டம் சமமானது. இருப்பினும் எல்லா மனிதரும் சமமானவர்கள் அல்லர். எல்லா மனிதரும் சமமாக இருப்பின் எல்லோருக்கும் சமமான சட்டத்தில் சிக்கல் வராது.
நோயாள்கள் எவரும் பாவிகள் அல்லர்; சபிக்கப்பட்டவர்களும் அல்லர். எனவே அவர்கள் மீது நாம் அனுதாபம் காட்டவேண்டும்.
நோயாளர் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை வாழவைக்க எம்மால் முடியும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். ஒரு தனிமனிதனாலும் உலகை மாற்ற முடியும்" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’