வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

பூஸாவிலுள்ள 12 பல்கலை. மாணவர்களையும் விரைவில் விடுவிக்க ஜனாதிபதி சம்மதம் நேற்று கொழும்பு சென்று திரும்பிய அமைச்சர் எஸ்.பி. தெரிவிப்பு

காலி, பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பன்னிரெண்டு பல்கலைக்கழக மாணவர் களையும் விரைவாக விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸ நாயக்க நேற்றுத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு மூன்றுநாள் விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நேற்றுக்காலை அவசரமாக கொழும்புக்குச் சென்று அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், மாலை மீண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டார்.
அங்கு வைத்தே அமைச்சர் இந்தத் தகவலைக் கூறினார்.
அமைச்சர் திஸநாயக்க அங்கு மேலும் கூறியதாவது :
பூஸா தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் நேற்றுமுன்தினம் என்னிடம் விடுத்த கோரிக்கையை இன்று (நேற்று) அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியிடம் முன்வைத்தேன். அவர்களை உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளைத் தாம் எடுப்பதாக ஜனாதிபதி என்னிடம் உறுதியளித்தார் என்றார்.
இதேவேளை கைதுசெய்யப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவி துவாரகாவை விடுதலை செய்யுமாறு அவரது சகோதரியான வசந்தகலா வழங்கிய மகஜரைக் கையேற்ற அமைச்சர் திஸநாயக்க அவரை விடுவிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’