வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 25 ஆகஸ்ட், 2010

வாழ்வாதாரத் திட்டத்தின் மூலம் உதவிப் பொருட்கள்

க்களின் வாழ்வாதாரத் திட்டங்களுக்கு எனது ஆதரவு என்றென்றும் இருக்குமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். புகைப்படம் இணைப்பு
சாவகச்சேரி உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் இன்று நடைபெற்ற இடம்பெயர்ந்த மக்களுக்குரிய வாழ்வாதாரத் திட்டத்திற்கான மேம்பாட்டு உதவிப் பொருட்களை வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான வாழ்வாதாரத் திட்டங்கள் மூலம் எமது மக்கள் நன்மையடைவதும் முன்னேற்றமடைவதும்தான் முக்கியமானதாக இருக்க வேண்டும். தமிழ்ச் சமூகம் எப்போதும் சுயதொழில் வாய்ப்பின் மூலம் வளர்ச்சியடைந்துள்ளமைக்கு பல சான்றுகள் இருக்கின்றன. அந்த வகையில் இந்த மக்களுக்கு உதவி புரிந்துள்ள சொன்ட் நிறுவனத்தின் பங்கு வரவேற்கத்தக்கது.

அழிவு யுத்தம் மூலம் இழந்தவற்றை இவ்வாறான உதவித் திட்டங்களின் மூலம் நிவர்த்தி செய்யப்படுவதுடன் மக்களின் வாழ்வாதாரத் திட்டத்திற்கு உதவி புரியும் சொன்ட் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்குமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதி வழங்கினார்.

அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 38 பயனாளிகள் இனங்காணப்பட்டனர். அவர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தையல் இயந்திரங்கள் நீர் இறைக்கும் இயந்திரங்கள் பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் நீர்ப்பம்பிகள் மற்றும் கோழி வளர்ப்புக்கான உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டன.






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’