இலங்கைப் பணிப் பெண்ணின் உடலில் 23 ஆணிகளை ஏற்றிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சவூதி அரேபிய அதிகாரிகள் வலியுறுத்தப்படுவர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்
.பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்கு மூலம் மொழிபெயர்க்கப்பட்டு, இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக சவூதி அரேபிய அதிகாரிகளுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கண்டிப்பதாகவும், இவ்வாறான நடத்தைகளை சிவில் சமூகமொன்றிலிருந்து எதிபார்க்கவில்லை எனவும் இவ்வாறான செயற்பாடுகளை சகித்துக் கொள்ள முடியாது எனவும் கிங்கிஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பாதிக்கப்பட்டவருக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர் இது தொடர்பில் தனது குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தாமல், பேரிட்சை மர முள் குற்றியதாக தெரிவித்துள்ளார். எனினும் விசேட வைத்தியரிடம் சிகிச்சைக்காக சென்ற பின் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’