வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 4 ஆகஸ்ட், 2010

வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த புலிச் சந்தேக நபர்கள் ஐவர் தற்கொலை முயற்சி? செய்தி பொய்யானது என்கிறது இராணுவம்

பொலநறுவை வெலிகந்தவில் உள்ள, திருகோணமடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடு தலைப் புலிகள் இயக்கச் சந்தேகநபர்கள் ஐந்து பேர் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தனர் என இணையத்தளம் ஒன்று நேற்றுச் செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப் பட்ட இவர்கள் பொலன்னறுவை மாவட் டம், வெலிகந்த, திருகோணமடு புனர்வாழ்வு நிலையங்களில் ஒரு வருடத்திற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும்
உறவினர்களைக் கூட சந்திக்க இவர்க ளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. அத்துடன், புனர்வாழ்வு நிலையத்தில் குடிதண்ணீர், மலசலகூடம், மருத்துவம் போன்ற வசதிகளும் குறைவாகவே காணப்
படுகின்றன என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்தச் செய்தி பொய்யானது எனத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் யூ.ஏ.பி.மெதவெல, இவ் வாறான செய்திகள் அரசு மற்றும் இராணுவத் தினர் மீது சேறு பூசும் நோக்கோடு வெளியி டப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’