வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 4 ஆகஸ்ட், 2010

புலிகள் மீள அணிசேர்ந்து தமிழீழம் அமைக்கும் முயற்சியில் ! கடந்த மாதத்தில் 1,562 பேர் கைது என்கிறார் பிரதமர்

புலிகள் மீள அணிசேர்ந்து தமிழீழம் அமைக்கும் முயற்சியில் ! கடந்த மாதத்தில் 1,562 பேர் கைது என்கிறார் பிரதமர்


மீள அணி சேர்ந்து, தமிழீழம் அமைக்கும் முயற்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஈடுபட்டு வருவதாக அரசாங்கத்துக்குத் தொடர்ந்து தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.
கடந்த மாதத்தில் மட்டும் அகதி முகாம்களில் இருந்தும், அவசரகாலச் சட்டத் தின் கீழும் பயங்கரவாதச் சட்டத்தின் கீழுமாக மொத்தம்1,562 புலிச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதனால் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசர காலச் சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியது தவிர்க்கமுடியாததாகும்.
இவ்வாறு அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துப் பேசுகையில் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார்.பிரதமர் டி.எம். ஜயரத்னா நாடாளுமன் றில் மேலும் தெரிவித்தவையாவது:
கடந்த ஒரு மாதகாலப் பகுதியில் ஜூலையில் அகதி முகாம்களில் இருந்து கைதுசெய்யப்பட்ட 723 பேரும், அவசர காலச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட 765 பேரும், பயங்கரவாதத் தடுப்புச் சட் டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட 74 பேரும் அடங்குகின்றனர் .
அகதி முகாம்களில் உள்ள மக்கள் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் உள்ள புலி உறுப்பினர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கடந்த ஒரு மாத காலத்தில்மாத்திரம் 1,562 புலிச் சந்தேகநபர்கள் அகதி முகாம்களில் இருந்தும், கைதுசெய்யப்பட்டனர் வெளிநாடுகளிலிருந்தும் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறான தகவல்களை அடிப்படையாகக்கொண்டு புலிச் சந்தேகநபர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கை மேலும் தொடர்கிறது.
கைதுசெய்யப்படும் புலி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்களுக்கு அமைய புலி உறுப்பினர்களால் கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில் நிர்வகிக்கப்பட்டுவரும் வீடுகள், காணிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றை அரச உடைமையாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, புலிகள் மீண்டும் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சி செய்கின்றனர். சர்வதேச விடுதலைப் புலிகள் அமைப்புகளுடனும், தனி நபர்களுடனும் ஒன்றிணைந்து புலிகளை ஒன்றுசேர்த்து தமிழீழத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தெளிவாகப் புலப்படுகிறது.
புலிகளுக்காக நிதி சேகரித்து புலிகளுக்கு ஆதரவானவர்களை ஒன்றிணைத்து புலிகள் அமைப்பை மறுசீரமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
புலிகளுக்கு உதவிசெய்து வந்த கனடாவின் அரச சார்பற்ற அமைப்பொன்றை அந்நாட்டு அரசு தடைசெய்துள்ளது. தென்னிந்தியாவில் புலிகளுக்கு உதவிவந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு சிறைவைக்கப்பட்டார்.
இவ்வாறான நிலையில் பயங்கரவாதத்தை இம்மண்ணில் தோற்கடித்து நாம் பெற்ற அமைதியைத் தக்கவைத்துக்கொள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது அவசியமாகிறது என்றார் பிரதமர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’