வேலணை பிரதேசத்தில் இன்றையதினம் வலுவிழந்தோர் உட்பட மீள்க்குடியேறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அனுசரணையில் பரவலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
இன்று முற்பகல் வேலணை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் நந்தகோபாலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வலுவிழந்த பதினைந்து பேருக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டதுடன் சுமார் 420 மீள்குடியேறிய மக்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொதிகளும் சேவாலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டன. இவ்வுதவிகளை வழங்கிவைத்து உரையாற்றிய ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (தோழர் கமல்) அவர்கள் பொதுமக்களுக்கு நாம் வாழ்வாதார உதவிகளை இன்று நேற்றோ அல்லது தேர்தல் காலத்தை முன்னிட்டோ வழங்கவில்லை. எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இருபது வருடங்களுக்கு முன்பே கைவிடப்பட்டு அந்தரித்த மக்களுக்கு எமது தோள்களில் அரிசி மூட்டைகளை சுமந்து சென்று வழங்கியவர்கள் நாம் எனத்தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் நாம் போலியான அரசியலையோ அல்லது மலிவான பத்திரிகைச் செய்திகளையோ வெளியிடாமல் மக்களுக்காக உண்மையாக உழைக்கின்றோம். எனவேதான் எமது மக்கள் எம்முடன் நிற்கின்றார்கள் எனத்தெரிவித்தார். இந்நிகழ்வில் உதவித் திட்டப்பணிப்பாளர் மீரா வேலணை ஈபிடிபி பொறுப்பாளர் தோழர் சிவராஜா போல் புங்குடுதீவு ஈபிடிபி பொறுப்பாளர் தோழர் நவம் சேவா லங்கா பணியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’