வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

கல்விச்சுற்றுலா மேற்கொள்ள உதவிபுரியுமாறு தீவக முன்பள்ளி ஆசிரியைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வேண்டுகோள்.

தீவகம் தெற்கு பிரதேச முன்பள்ளி ஆசிரியைகள் கல்விச்சுற்றுலா ஒன்றினை மேற்கொள்ள தமக்கு உதவிபுரியுமாறு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று (19) காலை யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் பணிமனைக்கு வருகை தந்த மேற்படி முன்பள்ளி ஆசிரியைகள் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில் உள்ள தமது பிரதேசத்தில் குறைந்த ஊதியத்தில் பெரும்பாலும் சேவை நோக்கிலேயே பணியாற்றும் தமக்கு கல்விச்சுற்றுலா ஒன்றினை மேற்கொள்ள உரிய உதவிகளைப் புரியுமாறு கேட்டுக்கொண்டனர். சுமார் முப்பது ஆசிரியைகளை உள்ளடக்கிய தீவக முன்பள்ளி ஆசிரியைகளின் வருடாந்த விளையாட்டுப் போட்டி அண்மையில் வேலணையில் இடம்பெற்றபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராக வருகைதந்து தமக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கியதை நன்றியுடன் நினைவுகூர்ந்த அவர்கள் கல்விச்சுற்றுலாவிற்கும் உதவிபுரியவேண்டும் எனக்கேட்டுக்கொண்டனர்.

முன்பள்ளி ஆசிரியைகளின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சரவர்கள் கல்விச்சுற்றுலா செல்லவேண்டிய இடங்கள் அதுதொடர்பான பயண ஏற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து தமக்கு ஓர் பயண மதிப்பீட்டு அறிக்கையினை சமர்ப்பிக்கும்படியும் அதுதொடர்பாக தான் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர்களுக்கு உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’