பன்னிரண்டு வருடங்களின் பின் நடைபெற்ற கிளாலி கண்மணி மாதா கோவில் திருப்பலி பூசையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் அவர்களும் சில்வேஸ்த்திரி அலன்ரின் உதயன் அவர்களும் கலந்து கொண்டனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நீண்டகாலம் இந்த பகுதி பல்வேறு இடம்பெயர்வுகளுக்குள்ளாகி தற்போது மீளக்குடியமர்ந்துள்ள நிலையில் இக் கோயில் புனருத்தாபனம் செய்யப்பட்டு நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை முதன் முறையாக திருப்பலி பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அந்த மக்களுடனான சந்திப்பில் அவர்களுடைய மீளக்குடியமர்வு வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புதல் போன்ற பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’