நல்லூர் தேவஸ்தான வளாகப்பகுதியில் அமைந்திருக்கும் நாவலர் மணிமண்டபம் தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக புத்திஜீவிகள் சமயப்பெரியார் நலன்விரும்பிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இடம்பெற்றுள்ளது புகைப்படம் இணைப்பு
. இன்று முற்பகல் யாழ்.மாநகரசபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படி உயர்மட்ட கலந்துரையாடலில் நல்லை ஆதீன முதல்வர் சிறிலசிறி சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா யாழ். பிரதேச செயலாளர் திருமதி தெய்வேந்திரம் நல்லூர் பிரதேச செயலாளர் செந்தில்நந்தனன் யாழ். வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி வேதநாயகம் யாழ். மாநகர ஆணையாளர் சரவணபவ குருமார் ஒன்றியத்தலைவர் மணி ஐயர் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கன் முன்னாள் அரசாங்க அதிபர் கணேஷ் துர்க்கை அம்மன் தேவஸ்தான தலைவரும் அதிபருமான ஆறுதிருமுகன் பேராசிரியர் சிற்றம்பலம் உட்பட இந்துக்குருமார் சங்கம் சைவக்குருமார் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நாவலர் கலாச்சார சபை பிரதிநிதிகள் இந்துசமய விவகார அலுவல்கள் அமைச்சு அதிகாரிகள் ஆகியோருடன் சமயப்பெரியார்கள் நலன்விரும்பிகள் ஆன்றோர் சான்றோர் எனப்பலரும் பங்குகொண்டனர்.
சைவத்தையும் தமிழையும் வளர்த்த ஆறுமுகநாவலர் பெருமானின் சிலையானது தேவஸ்தான வளாகத்திலிருந்து தற்போதுள்ள நாவலர் கலாச்சார மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட வரலாற்றை எடுத்துரைத்த பலரும் மீண்டும் நாவலர் பெருமானின் உருவச்சிலை பழைய இடத்திற்கே மீளத்திரும்ப வேண்டும் என்ற தமது ஆதங்கத்தையும் விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்கள். மேலும் நாவலர் மணிமண்டபம் தற்போது அமைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இங்கு முக்கிய உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாவலர் மணிமண்டபம் அருகிலேயே இடம்மாற்றப்பட வேண்டும் என்பது ஒரு கருத்தே தவிர அவ்வாறான தீர்மானம் எதுவுமே எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். இது தொடர்பாக அனைத்து தரப்பினராலும் சேர்ந்து எடுக்கப்படும் ஒருமித்த தீர்வே இறுதித் தீர்மானமாக இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தினார். அமைச்சரின் கருத்தை கூடியிருந்த அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்ட நிலையில் மீண்டும் தொடர் கூட்டங்களை நடாத்தி ஆக்கபூர்வமான முடிவுகளை மேற்கொள்வது என தீர்மானம்மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’