புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் தமது நிலைப்பாட்டை நாளைய தினம் வெளியிடப்போவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலான பிரதி ஒன்று, நேற்றிரவு தமக்குக் கிடைத்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அதில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீடிப்பது தொடர்பிலும், சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பது தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீடிப்பது தொடர்பில் தமது கட்சிக்கு உடன்பாடு இல்லை என அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய சீர்திருத்தம் தொடர்பில், தற்போது தமது கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் இதுதொடர்பில் தமது கட்சியின் தீர்மானம் நாளை வெளியிடப்படும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.
அதேவேளை, புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை, அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’