சவுதி அரேபியாவிற்கு சென்று பல இன்னல்களை அனுபவித்து உடலில் ஆணி ஏற்றப்பட்ட நிலையில் நாடுதிரும்பிய ஆரியவதிக்கு ஆதரவாகவும், இவ்வாறான கொடூரச் செயலை செய்த சவுதி அரேபிய எஜமானர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கொழும்பிலுள்ள சவூதி தூதுதரவாலயத்துக்கு முன்பாக இன்று நண்பகல் ஆர்ப்பாட்மொன்று இடம்பெற்றது.
கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவரலாயத்துக்கு முன்னால் இன்று நண்பகல் 12 மணிக்கு ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்கவும் கலந்து கொண்டார். பெண்கள் கண்காணிப்பகம், தொழிலாளர் ஒத்துழைப்பு சங்கம், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான செயற்பாட்டு வலையமைப்பு, மகளீர் அபிவிருத்தி ஸ்தாபனம், உள்ளிட்ட பல அமைப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குற்றவாளிக்கு தண்டனை வழங்கு, எஜமானர்களைக் கைது செய், வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடு போன்ற பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது அனர்த்தம் ஏற்படலாம் என்ற காரணத்தினால் அதிகளவான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டடிருந்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’