தென்மராட்சி கைதடி பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆலயங்களின் பரிபாலன சபையினர் தமது ஆலய தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று (19) காலை யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் பணிமனைக்கு வருகை தந்த கைதடி தெற்கு நாவற்குழி சிறிமகாவிஷ்ணு ஆலயம் மற்றும் கைதடி நாவற்குழி தெற்கு பெரும்படை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் பரிபாலன சபை நிர்வாகிகளே மேற்படி கோரிக்கையினை விடுத்தவர்களாவர். முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடபகுதி புனர்வாழ்வு புனர்நிர்மாண அமைச்சராக சேவையாற்றியபோது தமது ஆலயங்களின் புனரமைப்பில் ஆற்றிய அளப்பரிய உதவிகளை நன்றியுடன் நினைவுகூர்ந்த நிர்வாகிகள் ஆயினும் அதனைத்தொடர்ந்து தென்மராட்சியில் இடம்பெற்ற யுத்தசூழ்நிலைகளினால் மீண்டும் சேதமடைந்த தமது ஆலயங்களை புனரமைக்கவும் மேலும் ஆலயங்களுக்குரிய மின்சார இணைப்பினைப் பெற்றுக்கொள்ளவும் உதவிபுரியும்படி கேட்டுக்கொண்டனர்.
மேற்படி கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரிய மதிப்பீட்டு அறிக்கையினை சமர்ப்பிக்கும்படியும் எதிர்வரும் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் உரிய உதவிகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார். இச்சந்திப்பின் இறுதியில் மேற்படி ஆலயங்களுக்கும் தமது பிரதேசங்களுக்கும் வருகைதருமாறு ஆலய பரிபாலனசபை நிர்வாகிகள் அமைச்சரவர்களுக்கு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’