வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 21 ஆகஸ்ட், 2010

பேரித்தம் பழங்களை வீட்டுக்கு கொண்டு சென்று பொதிகளாக்கிக் கொண்டு வந்தேன் : அஸ்வர் எம்.பி

நாடாளுமன்ற முஸ்லிம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பேரித்தம் பழங்களை சிறு பொதிகளாக்குவதற்காகவே தான் வீடு கொண்டு சென்றதாகவும், அதன்பின் அவற்றை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்
.சவூதி அரோபிய அரசால் நாடாளுமன்ற முஸ்லிம் உழியர்களுக்கு என வழங்கபட்ட பேரித்தம் பழங்களை அஸ்வர் ஹாஜியார் வீடு கொண்டு சென்றார் என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த பேரித்தம் பழங்கள் தன்மீதுள்ள அபரீத நல்லெண்ணம் மற்றும் சகோதரத்துவ உறவு முறை காரணமாக அரபு நாடுகள் தன்னிடம் நன்கொடையாக வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஜயலத் ஜெயவர்த்தனவுக்கு இன்று பதிலளித்தார்.
"நிச்சயமாக நான் இதை வீடு கொண்டு சென்று பொதி செய்து மீண்டும் கொண்டு வந்துள்ளேன். அவர் தேவையென்றால் இதை நான் அவர் வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என அவர் எதிர்பார்க்கின்றாரா?" என கேள்வி எழுப்பினார் அஸ்வர்.
அத்துடன் தான் இந்த ரமழான் நன்கொடையை வழமையாக முஸ்லிம்களுக்கு மாத்திரம் அல்லாமல் முஸ்லிமல்லாத ஏனைய உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’